தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18வது மக்களவைத் தேர்தல் முடிந்து, தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனவே. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள ஒன்றிய பா.ஜ.க., அரசு. கடந்த ஜூலை 23-ஆம் நாள் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கி உள்ளது. ஆனால், தமிழ்நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய பா.ஜ.க., அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்டு 14-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வருவாய் மாவட்டங்களின் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும்

கழக முன்னோடிகள் பட்டியல் வருமாறு:

சென்னை – வைகோ, எம்.பி., பொதுச் செயலாளர்
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் – ஆடிட்டர் ஆ, அர்ஜூனராஜ், அவைத்தலைவர்
கடலூர் – மு. செந்திலதிபன், பொருளாளர்
திருச்சி – துரை வைகோ, எம்.பி., முதன்மைச் செயலாளர்
காஞ்சிபுரம் – மல்லை சி.இ. சத்யா. துணைப் பொதுச் செயலாளர்
விழுப்புரம் – செஞ்சி ஆ.கோ. மணி, துணைப் பொதுச் செயலாளர்
தஞ்சாவூர் – ஆடுதுறை இரா. முருகன், துணைப் பொதுச் செயலாளர்
திருநெல்வேலி – தி.மு. இராசேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்
கரூர் – டாக்டர் ரொஹையா, துணைப் பொதுச் செயலாளர்
திருவள்ளூர் – ஆவடி இரா. அந்திரிதாஸ், அரசியல் ஆய்வு மையச் செயலாளர்
தூத்துக்குடி – சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்
ஈரோடு – டாக்டர் சி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி., ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்
திருவண்ணாமலை – ஆ. வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர்
தேனி – வழக்கறிஞர் எஸ்.ஆசைத்தம்பி, சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர்
அரியலூர் – கு. சின்னப்பா, எம்.எல்.ஏ.,
மதுரை – புதூர் மு, பூமிநாதன், எம்.எல்.ஏ.,
தென்காசி – டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.எல்.ஏ.,
விருதுநகர் – டாக்டர் ஏ.ஆர்.ஆர். இரகுராமன், எம்.எல்.ஏ.,
கன்னியாகுமரி – வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல்
திண்டுக்கல் – என். செல்வராகவன்
செங்கல்பட்டு – காரை செல்வராஜ்
வேலூர் – பாசறை பாபு
தருமபுரி – ப.த. ஆசைத்தம்பி
கிருஷ்ணகிரி – ஆ. பாஸ்கரசேதுபதி
பெரம்பலூர் – வாரணவாசி இராசேந்திரன்
புதுக்கோட்டை – பால. சசிகுமார்
மயிலாடுதுறை – கவிஞர் மணிவேந்தன்
நாகப்பட்டினம் – வழக்கறிஞர் இரா. செந்தில்செல்வன்
சிவகங்கை – இராணி செல்வின்
இராமநாதபுரம் – ஆ.அமல்ராஜ், சட்டத்துறைச் செயலாளர்
சேலம் – மல்லிகா தயாளன்
நாமக்கல் – சந்திரா ஜெகநாதன்
திருவாரூர் – நக்கீரன்
நீலகிரி – இள. கோபாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: