×

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் வானவில் மன்றம் 2.0 தொடக்க விழா

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: திருவாரூர் மாவட்டம் திரு த்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள ஊராட்சி ஒன் றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் 2.0 தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனுப்பிரியா, வட்டார வளமைய பயிற்றுனர் கங்கா கலந்து கொண்டனர். வானவில் மன்ற கருத்தாளர்கள் நித்தியா மற்றும் முத்துக்குமாரி கலந்துகொண்டு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தனர். முடிவில் தமிழாசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெஆர்சி மாணவர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் வானவில் மன்றம் 2.0 தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Vanavil Forum 2.0 ,Tiruthurapundi ,Government School ,Thirutharapoondi ,Panchayat ,One ,Riya Middle ,School ,Thiru Thaurapoondi Vedai Road, Tiruvarur District ,Principal ,Saravanan ,District Education Officer ,Balasubramanian ,District Valamaiya ,Vanavil Forum 2.0 Inauguration Ceremony ,Thiruthuraipoondi ,
× RELATED சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: சென்னை...