விருதுநகர், ஆக.7: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் நடைபெற உள்ள 3வது புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா போட்டி ஆக.18ல் நடத்தப்பட உள்ளது. வினாடி வினா போட்டியில், பங்கேற்போர் ஏதேனும் போட்டி தேர்வில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். முதல் பரிசு ரூ.1 லட்சம், 2ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3ம் பரிசு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். வினாடி வினா போட்டி 3 நிலைகளாக நடத்தப்படும்.
முதல் நிலை எழுத்து தேர்வு. இதில் 50 வினாக்கள் கேட்கப்படும். போட்டியில் மாணவர்கள் 3 பேர் கொண்ட அணிகளாக கலந்து கொள்ள வேண்டும். முதலில் நடைபெறும் எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 12 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். அரையிறுதி 4 சுற்றுகளாக நடத்தப்படும். அரையிறுதியில் 6 அணிகள் இறுதி நிலைக்கு தேர்வு செய்யப்படும். இறுதி நிலை 6 சுற்றுகளாக நடத்தப்படும்.
போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கல்லூரியில் அதிகபட்சம் 5 அணிகள் வரை கலந்து கொள்ளலாம். அதில் அதிக மதிப்பெண் பெறும் ஏதேனும் ஒரு அணியே அரையிறுதிக்கு தேர்வாகும். வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்போர் விண்ணப்பிக்க ஆக.15 கடைசி நாள். இதற்கான படிவத்தை //forms.gle/CN4ey1H6Lqsdyex18 என்ற இணைய விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 8072491078 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆக.15க்குள் விண்ணப்பிக்கலாம் மாநில அளவிலான வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.