திருப்புவனம் ஆக. 7: திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட அல்லிநகரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி சூரப்பராசு தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் சின்னையா முன்னிலை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். திருப்புவனம் வட்டாரத்திற்குட்பட்ட அல்லிநகரம், கலியாந்தூர், நயிரான்பேட்டை, மேலராங்கியம், மாங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் குவிந்தனர்.
முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் சபித்தாள் பேகம்,ஊராட்சி உதவி இயக்குநர் கேசவதாசன், தாசில்தார் விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், அருள்பிரகாசம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா ஜெயராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சுகுணா உட்பட பலவேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அல்லிநகரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.