வேலூர் மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர்ந்த மழை

வேலூர், ஆக.7: வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 2ம் நாளாக பரவலாக மழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கொங்கு மண்டலங்களில் மட்டும் தென்மேற்கு பருவமழை கருணை காட்டி வந்த நிலையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் அவ்வபோது பெய்து போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கியது. இரவு முழுவதும் மழை பெய்த நிலையில், நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. வேலூர் நகரில் மாலை 6.30 மணியளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் சத்துவாச்சாரி, காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது. பாகாயம், தொரப்பாடி, கணியம்பாடியில் மிதமான மழையும், அரியூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர், கே.வி.குப்பம் விரிஞ்சிபுரம், குடியாத்தம் பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்தது. இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post வேலூர் மாவட்டத்தில் 2ம் நாளாக தொடர்ந்த மழை appeared first on Dinakaran.

Related Stories: