வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் ரேசில் ஈடுபட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: போலீசார் நடவடிக்கை

புழல்: வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் ரேசில் ஈடுபட்ட வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பைக் மற்றும் கார் ரேசில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஆட்டோ ரேசில், பைக்கில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், செங்குன்றம் அடுத்த கும்மனூர் அருகே 5 சொகுசு கார்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரேசில் ஈடுபட்டன. காரின் மேற்கூரை கண்ணாடியை திறந்து, அதன்வழியாக நின்றபடி கூச்சலிட்டபடி, வாலிபர்கள் சென்றனர்.

மேலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மைதானத்தில் வட்டமடித்து புழுதி பறக்க சாகசத்தில் ஈடுபட்டு செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பேரில், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வாகன பதிவெண் மூலம் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சோழவரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி – சோழவரம் ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் கனிமொழி ஆகியோரது மகன் நவீன் (19), அபாயகரமாக கார் ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனத்தை இயக்கியதாக நவீனுக்கு போலீசார் ரூ.10 அபராதம் விதித்தனர். அவரது நண்பர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பினர்.

The post வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் ரேசில் ஈடுபட்டவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: