டெல்லி : நேர்மையாக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரை பாஜக அரசு தண்டிக்கிறது என்று பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு தெரிவித்துள்ளார். மக்களவையில் தனது முதல் உரையில் பேசிய பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேரு,”மக்களின் அடிப்படை தேவைக்கான எல்லா விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது.. அவர்களால் எப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க முடியும்,”எனத் தெரிவித்தார்.