இளைஞர்களுக்கு இலவச யோகா வகுப்புகள்

 

ஊட்டி, ஆக.6: ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோகா நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோகா வகுப்புகளில் ‘ஷாம்பவி மஹா முத்ரா’ எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இவ்வகுப்பு, ஊட்டியில் சாரிங் கிராஸில் அமைந்துள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

மேலும் இவ்வகுப்புகள், காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் என ஒரு நாளின் இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இதில் 15 வயது தொடங்கி 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்பும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் isha.co/youth-iyp என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 9787749934 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இளைஞர்களுக்கு இலவச யோகா வகுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: