காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை, ஆக.5: காரைக்குடி அரசு ஐடிஐல் நேரடி மாணவர் சேர்க்கைக்கு ஆக.16வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காரைக்குடி அரசு ஐடிஐல் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்றது. தொடர்ந்து கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்நிலையில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக.16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன், பேசிக் டிசைனர் விர்ச்சுவல் வெரிபயர் மெக்கானிக், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், மெக்கானிக் எலெக்ட்ரிக் வெகைல், கோபா, இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்டரிங் டெக்னிசியன் ஆகிய ஓராண்டு தொழிற்பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கு ஆக.16ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2நகல், கலர் போட்டோ 5, கொண்டு வர வேண்டும்.

ஐடிஐல் சேரும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கூடுதல் விவரம் அறிய 94990 55784, 94990 55785 என்ற செல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: