×

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஈடி சம்மன்

கொல்கத்தா: மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் மனைவியிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ஜிபன் கிருஷ்ணா சாஹா இந்த ஆண்டு மே மாதம் ஜாமீனில் விடுதலையானார். இந் நிலையில் கிருஷ்ணா சாஹாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில், “ ஆசிரியர் பணி நியமன முறைகேடு விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : ED ,Trinamool Congress MLA ,Kolkata ,The Enforcement Directorate ,West Bengal ,Jiban Krishna Saha ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை