×

அசாமில் லவ் ஜிகாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை: முதல்வர் ஹிமந்த பிஸ்வா அறிவிப்பு

கவுகாத்தி: அசாமில் லவ் ஜிகாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. அசாமில் நேற்று நடந்த பாஜ மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாமில் லவ் ஜிகாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அசாம் மாநிலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அரசு பணிகளில் நியமிக்கப்படும் வகையில் புதிய குடியுரிமை கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். மேலும், “தேர்தல் வாக்குறுதிப்படி ஒரு லட்சம் அரசு பணிகளில் பழங்குடியினர் முன்னுரிமை பெற்றுள்ளனர். முழுமையான பட்டியல் வௌியிடும்போது அதன் விவரங்கள் தெரியும்” என்றார்.

The post அசாமில் லவ் ஜிகாத் வழக்குகளுக்கு ஆயுள் தண்டனை: முதல்வர் ஹிமந்த பிஸ்வா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Assam ,Chief Minister ,Himanta Biswa ,Guwahati ,Himanta Biswa Sharma ,BJP ,Dinakaran ,
× RELATED அசாமில் புதிய ஆதாருக்கு என்ஆர்சி எண் கட்டாயம்