×

வாகனம் மோதி வாலிபர் பலி

தர்மபுரி, ஆக.4:காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியில்இ வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறியதில் உடல் முழுவதுமாக நசுங்கியது. இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் பைசுஅள்ளி விஏஓ திருநாவுக்கரசுக்கு தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடம் வந்த காரிமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் மீது மோதிய வாகனம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Madlampatti ,Karimangalam ,Paisualli ,VAO Thirunavukaras ,
× RELATED தருமபுரி தனியார் பள்ளியில்...