×

காவிரி கரையோர மக்களுக்காக மருத்துவ சிறப்பு முகாம்கள்: வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

காவிரி கரையோர மக்களுக்காக மருத்துவ சிறப்பு முகாம்கள்: வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி கரையோர மாவட்ட மக்கள் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக கடந்த 2ம் தேதி 37 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 50 மருத்துவ முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனையும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனையும், தொடர் சிகிச்சையும் வழங்கப்படும். இதற்காக பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் மற்றும் பொட்டலங்கள் உரிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்பின் போது ஏற்படக்கூடிய காயங்கள், விஷக்கடி, பாம்பு கடி போன்ற நிகழ்வுகளுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 108 அவசர ஊர்தி வாகனங்களும் மாவட்டம் தோறும் தயார் நிலையில் உள்ளது.

வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை
* சுத்தம் பேணுதல் – கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்
* கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும்
* இணைநோய் உள்ளவர்கள் வேலைக்கு மருந்துகளை உட்கொள்ளவதுடன், சரியான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்
* குழந்தைகளை வெள்ள நீரில், அருகில் விளையாட அனுமதிக்காதீர்கள்
* கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியாவை தடுக்க கொசு வலைகளை பயன்படுத்தவும்

வெள்ள நேரங்களில் செய்யக்கூடாதவை
* வதந்திகளால் தவறாக வழிநடத்தப்படுவதை தவிர்க்கவும்
* மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கும் வரை தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம்
* பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையினரால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று உடல் உபாதைகளான காய்ச்சல், சிறுகாயங்கள், வெட்டு காயங்கள், சளி, இருமல், தும்மல், கை கால் வலி போன்ற உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்து கொண்டு பயன்பெறலாம்.

The post காவிரி கரையோர மக்களுக்காக மருத்துவ சிறப்பு முகாம்கள்: வெள்ளப்பெருக்கு நேரங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Cauvery Coastal ,Chennai ,Minister ,M.Subramanian ,Cauvery Coastal Districts ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...