×

தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பத்தூரில் நாளை செயல்வீரர்கள் கூட்டம்

சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வு கூட்டம் சென்னை அம்பத்தூர் எச்.பி.எம். பேரடைஸ் திருமண மண்டபத்தில் நாளை மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் டி.என்.முருகானந்தம் தலைமை வகிக்கிறார்.

மாநில பொதுச்செயலாளர் இல.பாஸ்கரன் வரவேற்புரையாற்றுகிறார். தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் டி.டி.அய்யம்பெருமாள், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன், மற்றும் வளசை ஜெ.பாலமுருகன், எச்.பீர்முகம்மது, கவுன்சிலர் கே.வி.திலகர், எம்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.டி.மெய்யப்பன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ் குமார், முன்னாள் எம்‌.பி., ஜெ.எம்.ஆரூண், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச்செயலாளர்கள் டி.செல்வம், கே.தணிகாசலம், அருள்பெத்தையா, மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ராம்மோகன், மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், ஓ.பி.சி.பிரிவு தலைவர் டி.என்.நவீன், சர்க்கிள் தலைவர்கள் இரா.மோகனரங்கன், டி.லோகாபிராம், இ.மோகன் குமார், பி‌.ரோமியோ, ஏ.என்.பச்சையப்பன், எம்.எம்.முருகன், எம்.ஜி.முரளி, ஜெ.ஜெகன், ஜி.எஸ்‌.ஜெயகுமார், டி.மோகன் பாபு, ஜி.எஸ்.குணசீலன், வி.ரமேஷ், ஏ.வி.தனசேகர், என்.கோபாலகிருஷ்ணன், ஏ.என்.பன்னீர் செல்வம், எஸ்.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பத்தூரில் நாளை செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Tensennai West District Congress ,Chennai ,Tensenna West ,District ,Congress ,Chennai Ambattur ,H. B. M. ,Paradise Wedding Hall ,President ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED பெண் காவலரை கேலி செய்த கல்லூரி மாணவர்...