×

அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர்கள் (திருவள்ளூர்) ப.பிரியாராஜ், (பூந்தமல்லி) பிரபாகரன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, இணை இயக்குநர் சுகாதார பணிகள் மீரா, துணை இயக்குநர்கள் (குடும்ப நலம்) சேகர், (காச நோய்) சங்கீதா, (தொழுநோய்) வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளான புறநோயாளிகள் சிகிச்சை, உள் நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, முட நீக்கியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சைகள், குழந்தைகள் நல சிகிச்சை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். மேலும் மருத்துவமனைகளில் எக்ஸ்ரே நுண்கதிர் சேவை, அல்ட்ரா சொனோகிராம் சேவை மற்றும் ஆய்வக சேவைகள் குறித்தும், அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவைகளை குறைவின்றி வழங்கும் படியும், மேலும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை உரிய முறையில் வழங்குவது குறித்தும் மகப்பேறு, மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை சிறப்பு கவனம் எடுத்துகொள்ள வேண்டும் என கலெக்டர் த.பிரபுசங்கர் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Government Hospitals ,Government Primary Health Centres ,Thiruvallur District ,District Level Medical College Hospital ,Government Primary Health Centers ,Dinakaran ,
× RELATED மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!