×

திருத்தணியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மரியாதை

திருத்தணி, செப். 6: திருத்தணியில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கிராம மக்கள் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் பிறந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் இங்குள்ள ஆலமரத் தெருவில் தனது தொடக்க கல்வியை கற்று உலகின் தலைசிறந்த தத்துவ மேதையாக, கல்வியாளராக சிறந்த ஆசிரியராக, ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்தார். சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகவும் இரண்டாவது குடியரசு தலைவராக பதவி வகித்தார். தனது வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் அவரது பிறந்தநாளை செப்டம்பர் 5 ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ராதாகிருஷ்ணன் முழு உருவ வெண்கல சிலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆசிரியர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உருவ சிலைக்கு மலர் மலை அறிவித்து மரியாதை செலுத்தினர்.

நகர மன்ற உறுப்பினர்கள் ஷாம் சுந்தர், அசோக் குமார் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் ரங்கநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லதா துணைத்தலைவர் ஞானபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்பி திருத்தணி கோ.அரி ராதாகிருஷ்ணன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள் குப்புசாமி, ஜெயசேகர்பாபு, கேபிள் சுரேஷ், முனுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த சொந்த கிராமமான வெங்கடாபுரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பி.டி.சந்திரன் தலைமையில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு கிராம மக்கள் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

The post திருத்தணியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Teacher's Day ,Thiruthani ,Dr. ,Radhakrishnan ,Sarvapalli ,Venkatapuram ,Tiruvallur District, Tiruvallur ,Tiruthani ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை