×

பொன்னேரி அருகே காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

பொன்னேரி, செப். 7: பொன்னேரி அடுத்த கொக்கு மேடு கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி கோகிலா(78). இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காலையில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது மகள் அய்யம்மாள்(48) உறவினர்கள் மற்றும் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் அருகே சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள கால்வாயில் பிணமாக கிடந்துள்ளார். இன்று காலை காலைக்கடன் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார், மூதாட்டி கோகிலாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post பொன்னேரி அருகே காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Moothati Kokila ,Koku Medu ,Ayyammal ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால்...