×

மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிவாயல்சாவடியில் பூமியில் புதைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் எரிவாயு கசிந்து வான்நோக்கி புகை மண்டலமாகச் செல்கிறது. எரிவாயுக் கசிவை தொடர்ந்து பொதுமக்கள் செல்லாத வண்ணம் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். கொசஸ்தலை ஆற்றை ஒட்டி தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உள்ளது.

 

The post மணலி புதுநகர் அருகே இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manali Pudunagar ,Tiruvallur ,Tiruvallur district ,Vellivayalchavadi ,Dinakaran ,
× RELATED நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது;...