×

நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள 110 அடி உயரம் கொண்ட பைகாரா அணை நிரம்பியது. அணையிலிருந்து உபரி நீர் 3 மதகுகள் வழியாக வெளியேறி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்குருத்தி அணை நிரம்பி அங்கிருந்து உபரி நீர் பைகாராவுக்கு வருவதால் அணை நிரம்பி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பைகாரா அணை நிரம்பியதை அடுத்து 3 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 3 மதகுகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு பைக்காரா நீர்வீழ்ச்சி வழியாக மாயார் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மாயார் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது.

The post நீலகிரி பைகாரா அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri Baikara dam ,Nilgiris ,Baikara dam ,Udagai ,Mukkuruti Dam ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் பயன்பாட்டிற்காக...