×

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு ஒடிசா – வங்காளம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மாலை அல்லது இரவில் ஓடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் உள்ள பூரி- தீகா இடையே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 14ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Tamil Nadu ,Chennai ,Odisha - Bengal ,Chennai Meteorological Centre ,
× RELATED தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை...