காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

திருச்சி, ஆக.1: திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஆற்று பாலத்தின் டெஸ்ட் பைல் பணிகளை ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர். திருச்சி-ரங்கத்தை இணைக்கும் காவிரி பாலத்தில் தினமும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. இதனால் பாலத்தில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். வாகன பெருக்கத்தின் காரணமாகவும் காவிரி பாலத்திற்கு அருகே மற்றொரு புதிய பாலம் கட்ட தமிழக அரசின் ஒப்புதல் பெற்று புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது.

இதற்காக ராட்சத துளையிடும் இயந்திரம் மற்றும் பெரிய பொக்லைன் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இரவுப்பகலாக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக தற்போது பில்லர் அமைக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து காவிரியில் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் முக்கொம்பு வந்தடைந்து, நேற்று காலை கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடையை நோக்கி பாய்ந்தோடுகிறது. இந்நிலையில் காவிரியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் பாலப்பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று நேற்று அதிகாரிகள் பார்வையிட்டனர். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஆற்று பாலத்தின் டெஸ்ட் பைல் பணிகளை ெநடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர். இதில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் செந்தில் மற்றும் கோட்ட பொறியாளர் கண்ணன், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் புகழேந்தி, ஜோதிபாசு தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் ஜோதிபாசு, உதவி பொறியாளர் நடராஜன் ஆகியோர் காவிரி ஆற்று பாலத்தின் டெஸ்ட் பைல் பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர்.

The post காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: