ஓட்டல்களில் கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் பறிமுதல்

தர்மபுரி, ஆக.1: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மீன் கடைகளில், நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, விற்பனைக்கு வைத்திருந்த பழைய மற்றும் கெட்டுப்போன சுமார் 20 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், ஒகேனக்கல் ஏரியாவில் உள்ள மீன் வறுவல் கடைகள், ஓட்டல்கள், தாபா போன்ற உணவகங்களில் விற்பனை செய்யப்படும் மீன்கள் மற்றும் கறி வகைகளில் வண்ணங்கள் சேர்க்கக்கூடாது என உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆடி பெருவிழா காலங்களில், உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் தூய்மையாக பராமரிக்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு உயிருள்ள மீன்கள் மட்டுமே, விற்பனைக்கு வைக்க வேண்டும். பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு விற்பனை செய்யப்படும் அனைத்து ஓட்டல், கடைகள், தாபாக்களில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஓட்டல்களில் கெட்டுப்போன 20 கிலோ மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: