சிவகங்கை, ஆக.1: சிவகங்கை அருகே தமறாக்கி ஏழைகாத்த அம்மன், கலியுக அய்யனார், மந்தை கருப்ப சுவாமி கோயில் முளைளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. தமறாக்கியில் இடையமேலூர் சாலையில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 22 ஜோடிகள் போட்டியில் கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கிலோமீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் 4 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும், வெற்றி கோப்பை, ரொக்கம், உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்.
The post மாட்டுவண்டி பந்தயம் appeared first on Dinakaran.