மேலூர், ஆக. 1: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், மேலூரில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி, மேலூர் வட்டார வள மையத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார வள மைய கல்வி அலுவலர்கள் அழகு மீனா மற்றும் ஜெயசித்ரா தலைமை தாங்கினர். கீதா முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் 141 தன்னார்வலர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் செயல்பாடுகள் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.