இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் சனிக்கிழமை அன்று சென்னை, சேலம் , கோவை, ,ஈரோடு மற்றும் பெங்களுரில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை, சேலம் , கோவை, ,ஈரோடு மற்றும் பெங்களுருக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. //tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
The post ஆடி அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.