சென்னை: கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. கால்வாய் சீரமைப்பு பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. “கால்வாய் சீரமைப்பு பணிகளை 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். சீரமைப்பு பணிகளின் நிலை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The post கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.