விருதுநகர், ஜூலை 30: 1,474 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 91,096 மாணவ, மாணவியருக்கு சமூக நலத்துறை சார்பில் இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. விருதுநகர் ஊராட்சி ஆவுடையாபுரம் ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், மாவட்டத்தில் 1,474 பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 91,096 மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது.
சமூக நலத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 6 தையல் கூட்டுறவு அமைப்புகளில் உள்ள மகளிர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஒவ்வொரு குழந்தைக்கும் அளவெடுத்து துணிகளை தைத்து, பின் நேரடியாக குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்படுகிறது என்றார். நேற்று ஆவுடையாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் 143 மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post சமூக நலத்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கல் appeared first on Dinakaran.