×

காவிரியிலிருந்து நீர் திறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. 27ம் தேதி 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

சம்பா சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே, உடனடியாக இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

The post காவிரியிலிருந்து நீர் திறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Karnataka government ,Dinakaran ,
× RELATED காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க...