மதுரை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழனி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனவா? என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிலம் மற்றும் கிரிவல பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோர்ட் ஆணைக்கு எதிராக தேவஸ்தானம் முன் வார்டு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனரா என விசாரணை நடத்த கோரியும், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
The post உத்தரவுக்கு எதிராக நகராட்சியில் தீர்மானமா?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.