போடி, ஜூலை 26: போடியில் வேளாண் மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்த சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.இதில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்கள் வீணாகாமல் தரம் பிரித்து மதிப்பு கூட்டி லாபகரமாக விற்பனை செய்வதற்கு தேவைப்படும் வேளாண் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நீண்ட கால கடனுதவியுடன் 3% சதவீதம் வட்டி மானியம் இத்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தனர்.
மேலும் இந்த முகாமில் வேளாண்மை இணை இயக்குநர், தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், தோட்டக் கலை துணை இயக்குநர், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட வள அலுவலர் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
The post வேளாண் உட்கட்டமைப்பு நிதி சிறப்பு முகாம் appeared first on Dinakaran.