ஆடி பொங்கல் விழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி, ஜூலை 26: கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வருடாந்திர ஆடிப் பொங்கல் உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பசாமி வேடமடைந்த பக்தர்கள் உருமி மேளம் இசை வாத்தியங்களுக்கு ஏற்றவாறு திரியாட்டம், நடனமாடி அருள் வாக்கு கூறினர்.

தொடர்ந்து பக்தர்கள் பூக்குழியில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். முன்னதாக முளைப்பாரிகளை பக்தர்கள் கோரைப்பள்ளம் கிராமத்தின் தெய்வம், கருப்பணசுவாமி உள்ளிட்ட கிராம பரிவார ஆலயங்களை முளைப்பாரியுடன் வலம் சுற்றி முக்கிய வீதிகளின் வழியாக ஊரவலமாக சென்று ஆலயத்தின் முன்பாக முளைப்பாரியை இறக்கி வைத்து வட்டமிட்டு கும்மியாட்டம், நடனமாடி பெண்கள் வழிபாடு செய்தனர்.

The post ஆடி பொங்கல் விழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: