கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகள் வாழை பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம் என்று பாபநாசம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சிநேகப்பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பாபநாசம் வட்டாரத்தில் காரிப் பருவத்தில் வாழை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள் தங்கள் பயிரை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.2,114 பிரீமியம் தொகையை செலுத்தி பயன்பெறலாம். செப்டம்பர் 16ம் தேதிக்குள் பிரீமியம் தொகையினை செலுத்தி காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகள் வாழை காப்பீடு செய்து கொள்ள அழைப்பு appeared first on Dinakaran.