தர்மபுரி, ஜூலை 26: தேய்பிறை பஞ்சமியையொட்டி, வராகி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேய்பிறை பஞ்சமியையொட்டி, அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் வராகி அம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார். தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயர மகாகாளி வராகி அம்மன் கோயிலில், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில், அஷ்ட வராகி அம்மன் கோயிலில், சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பூசணியில் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
The post அஷ்டவராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.