இந்த நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல் ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, கடந்த திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மேல் முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், கு.க.செல்வம் தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கு.க.செல்வம் காலமாகி விட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், காலமாகி விட்ட கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: உரிமை குழு நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு.! திமுக எம்எல்ஏக்கள் வாதிட ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.