முன்னதாக, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ள மைதானத்தை பார்வையிட்டு, மாநாட்டு அரங்கம், உணவுக்கூடம் வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்படக் கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., மயிலம் பொம்மபுர ஆதீனம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் இரா.சுகுமார், இ.ஆ.ப., சி. ஹரிப்ரியா, தலைமை பொறியாளர் பொ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஹா.ஷேக் மொகைதீன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பா.பாரதி, செ.மாரிமுத்து, ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி திருக்கோயில் அறங்காவலர்கள் ச.மணிமாறன், கே.எம். சுப்பிரமணியன், ரா.ராஜசேகரன், ஜெ.சத்யா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
The post பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆய்வு..!! appeared first on Dinakaran.