சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்: பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் பல இடங்களில் அதிக கன மழை பெய்துவருகிறது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். குடகு, சிக்மகளூரு, ஹாசன், வயநாடு மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

வால்பாறை, நீலகிரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை தவிர மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என்றும் கணித்துள்ளார்.

The post சுதந்திர தினத்துக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும்: பிரதீப் ஜான் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: