வாணியம்பாடி: சென்னையில் இருந்து ஓசூருக்கு 35 ஆயிரம் லிட்டர் சோப் ஆயில் ஏற்றிக்கொண்டு கனரக டேங்கர் லாரி நேற்று புறப்பட்டு வந்தது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதிக்கு வந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த 35 ஆயிரம் லிட்டர் சோப் ஆயில் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. டிரைவர் வேணுகோபால்(40) லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்டு, அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
The post சென்னையில் இருந்து சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததில் ஆறாக ஓடிய சோப் ஆயில் appeared first on Dinakaran.