இப்பயணத்தின் முதற்கட்டமாக நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல், அனைத்து வகை பயிர்களிலும் அறுவடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. இங்கு மேற்கொள்ளப்பட்ட கருத்து பரிமாற்றங்களை தமிழ்நாடு முதல்வரின் ஆணையைப் பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.