விவசாயிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு கந்தர்வகோட்டையில் கத்திரிக்காய் விலை கடும் உயர்வு: கிலோ ரூ.100க்கு விற்பனை

 

கந்தர்வகோட்டை,ஜூலை24: கந்தர்வகோட்டையில் கத்திரிக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100க்கு விற்பனையாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் விவசாயிகள் அன்றாட செலவுகளுக்காக கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, கீரை வகைகள் பயிர் செய்து அதனை ஏலக்கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இவை அனைத்தும் உள்ளூர் காய்கறி என்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வது வழக்கம்.

கத்திரிகாய் காய்ப்பு குறைந்து உள்ள நிலையில் கிலோ ஒன்று 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் காய்ப்பு இல்லாததால் விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க கத்திரிக்காயின் விலை அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் கத்திரிக்காய் வாங்குவது தவிர்த்து குறைந்த விலையில் உள்ள காய்கறிகளை வாங்கி செல்லுகிறனர்.

வியாபாரிகள் கூறும்போது, ஆடி மாதத்தில் கத்திரிக்காய் குறைந்து அளவில் தான் காய்க்கும். அதில் அதிக அளவு பூச்சியின் தாக்குதல் இருக்கும். ஏல கடைகளுக்கு கத்திரிக்காய் வரத்து குறைந்துள்ள நிலை உள்ளது. இதனால் விரை அதிகமாக உள்ளது என்றனர்.

The post விவசாயிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு கந்தர்வகோட்டையில் கத்திரிக்காய் விலை கடும் உயர்வு: கிலோ ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: