உஜ்வாலா திட்டத்தில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கல்

கழுகுமலை, ஜூலை 24: கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனியில் ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சீனிவாசா பாரத் கேஸ் கிராமின் வித்ராக் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜ குருவிகுளம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கிலி பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிவசங்கர், ஹரி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து 20 பயனாளிகளுக்கு இலவச கேஸ் அடுப்பு, எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் முத்துராமலிங்கம், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் விஸ்வநாகராஜன், முன்னாள் ராணுவ பிரிவு நல்லையசாமி மற்றும் கழுகுமலை, கரடிகுளம், செட்டிக்குறிச்சி, வெங்கடேஸ்வரபுரம், சிதம்பரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உஜ்வாலா திட்டத்தில் இலவச காஸ் சிலிண்டர் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: