ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்: அறிவிப்புகளை அள்ளி வழங்கிய ஒன்றிய அரசு

 

டெல்லி: 2024-25-ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, ஆந்திரா, மேற்குவங்க மாநிலங்களுக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியுடன் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது,

பீகார் சிறப்புத் திட்டம்

* பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு.

*பீகார் மாநிலம் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும்.

*பீகாரில் கயா முதல் பஞ்சாப் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் உருவாக்கம்.

*பிகார் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

*வெளிநாடுகளில் இருந்து கடன்பெற பிகாருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

*ரூ.11,500 கோடியில் பீகாரில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பீகார் மாநிலம் இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது என நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

*பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கவும், பாசனத்திற்கும் திட்டங்கள் கொண்டுவரப்படும்.

*நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளால் பீகாரில் வெள்ள பாதிப்பை தடுக்க புதிய திட்டங்கள்.

* காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.

*பீகார் கயா மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும்.

* பீகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது .

* நாளந்தா பல்கலை.யின் மேம்பாட்டுக்கும், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா சிறப்புத் திட்டம்

* ஆந்திராவின் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

* ஆந்திராவில் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*ஆந்திர பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

*ஆந்திராவில் சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அறிவிக்கப்படுகிறது.

* விசாகப்பட்டினம் – ஐதராபாத் – சென்னை தொழில்வழித்தட திட்டம் அமைக்க நடவடிக்கை.

* இமாச்சல பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க திட்டம்

* அசாம், இமாச்சல் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

* உத்தராகண்ட், சிக்கிமில் நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகளை தடுக்கவும் சிறப்புத் திட்டம்.

 

The post ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்: அறிவிப்புகளை அள்ளி வழங்கிய ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: