சிவகங்கை, ஜூலை 23: அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ன்இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரசுப்பள்ளிகளின் தரத்தை முன்கொணர்வதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை பணம், பொருள் அல்லது களப்பணி மூலுமாக வழங்கலாம். சிறு, குறு, நடுத்தர, பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனி நபர்கள், பொதுமக்கள் அரசுப் பள்ளிகளை உயர்த்த பங்களிக்க முடியும். https://nammaschool.tnschools.gov.in என்ற வலைத்தளம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விருப்பமான பள்ளியை தேர்வு செய்து பங்களிப்பு செய்ய முடியும்.
ஒவ்வொரு பள்ளியின் தேவைகளும் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளி படிப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் உயர் கல்வி கற்க தேவையான உதவிகளும் செய்யலாம். சிவகங்கை மாவட்ட அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் அனைவரும் இணையலாம். 9500349916 என்ற செல் எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி வழங்கலாம் appeared first on Dinakaran.