₹22 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

அரூர், ஜூலை 23: அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 188 விவசாயிகள், 900 பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த பருத்தியை கொள்முதல் செய்ய, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் எம்சி 5 ரகம் பருத்தி, குவிண்டால் ₹6,809 முதல் ₹7,469 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 900 மூட்டை பருத்தி ₹22 லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தனர்.

The post ₹22 லட்சத்திற்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: