ஒடிசா தேர்தல் தோல்விக்கு பிறகும் வி.கே. பாண்டியனுக்கு நவீன்பட்நாயக் ஆதரவு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகும் தமிழ்நாட்டை ேசர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியனுக்கு நவீன்பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இதனால் 24 ஆண்டுகள் தொடர்ந்து ஒடிசா முதல்வராக இருந்த நவீன்பட்நாயக் பதவி விலகினார். பா.ஜ ஆட்சி தற்போது அங்கு நடக்கிறது. இந்த தோல்விக்கு ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து தற்போது பிஜூஜனதாதளம் கட்சியில் இணைந்துள்ள வி.கே.பாண்டியன் மீது கட்சியினர் குறை கூறி வருகிறார்கள். இந்நிலையில், வி.கே. பாண்டியன் பற்றி இனிமேலும் பேச வேண்டாம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நவீன்பட்நாயக் கேட்டுக்கொண்டதாகவும், மாநிலங்களவையில் வழக்கம் போல் பா.ஜ அரசுக்கு பிஜூஜனதாதளம் ஆதரவு தரும் என்றும் கூறியதாகவும் ஒடிசாவில் தகவல் பரவியது. இதுபற்றி நேற்று எக்ஸ் தளம் மூலம் நவீன்பட்நாயக் விளக்கம் அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: வி.கே பாண்டியனால் பிஜூ ஜனதாதளம் கட்சியில் பிளவு என்ற தகவல் முற்றிலும் தவறானது. வி.கே. பாண்டியன் ஒடிசாவுக்கும், பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும் சேவையாற்றியுள்ளார். அதற்காகவே வி.கே பாண்டியனை பற்றி பேச வேண்டாம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் கேட்டுக்கொண்டதாக கூறப்படுவதும் தவறானது. அதே போல் மாநிலங்களவையில் பா.ஜவுக்கு, பிஜூ ஜனதா தளம் ஆதரவளிக்கும் என்று அமித்ஷாவுக்கு உறுதி அளித்ததாக கூறப்படுவதும் தவறு என்றார்.

The post ஒடிசா தேர்தல் தோல்விக்கு பிறகும் வி.கே. பாண்டியனுக்கு நவீன்பட்நாயக் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: