கட்டி முடித்து 8 மாதங்களாகியும் காட்சி பொருளாக உள்ள அங்கன்வாடி மையம்

ஊத்துக்கோட்டை: பனப்பாக்கம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் காட்சி பொருளாக அங்கன்வாடி மையம் உள்ளது. இதனை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது. ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் ஊராட்சியில் சிறுவர் – சிறுமிகள் அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார்கள். அந்த மையம் பழுதடைந்து காணப்பட்டதால் புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 2022 – 2023ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.12 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமமான பனப்பாக்கத்தில் இருந்த அங்கன்வாடி மையம் பழுதடைந்து காணப்பட்டது. அதனால் மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ சேவை மையத்தில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அது கட்டி முடித்து 8 மாதங்கள் ஆகிறது. இதுவரை திறக்கப்படவில்லை அதை விரைவில் திறக்க வேண்டும் என கூறினர்.

The post கட்டி முடித்து 8 மாதங்களாகியும் காட்சி பொருளாக உள்ள அங்கன்வாடி மையம் appeared first on Dinakaran.

Related Stories: