கன்வார் யாத்திரை விவகாரம்: கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயரை எழுதும்படி, உ.பி., உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: கன்வார் யாத்திரை விவகாரம்: யாத்திரை செல்லும் பாதையில் உள்ள கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயரை எழுதும்படி, உ.பி., உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரு மாநில அரசுகளின் உத்தரவால் இஸ்லாமிய வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம். கடை முன்பு உரிமையாளர்களின் பெயர் பலகையை வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயரை எழுதும்படி உத்தரவிட்டது ஆன்மிக யாத்திரையில் மத வெறுப்பை பாஜக பின்பற்றுவதாக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்திரப்பிரதேசத்தில் தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மதவெறுப்பை கையில் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையை மாற்ற முயற்சிப்பதாக் கண்டனம் எழுந்தது.

இதனை அடுத்து உத்தரபிரதேச, உத்தராகண்ட் அரசுகளின் உத்தரவை எதிர்த்து மஹுவா மொய்த்ரா, தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரபிரதேச, உத்தராகண்ட் அரசுகளின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

The post கன்வார் யாத்திரை விவகாரம்: கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளரின் பெயரை எழுதும்படி, உ.பி., உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Related Stories: