அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரியில் குமரிமுனை, அகத்தீஸ்வரர், கொட்டாரம், அஞ்சுகிராமம், தோவாளை, ஆரல்வாய்மொழி, தனிக்கார கோணம், கீரிப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே குமரிக்கடலில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அதிக உயரத்துடன் எழுகின்றன. இதனால் மணக்குடி, கோவளம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குமரி மாவட்டம்; விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்! appeared first on Dinakaran.