82வது பிறந்த நாள் காங். தலைவர் கார்கேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து


புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் கார்கே நேற்று தன் 82வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தன் எக்ஸ் தள பதிவில் வௌியிட்ட வாழ்த்து செய்தியில், “காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான கார்கேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மக்கள் நலனுக்கான உங்களின் அயராத சேவையும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு உத்வேகம். உங்களுக்கு அதிக அன்பு, நீண்ட ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

The post 82வது பிறந்த நாள் காங். தலைவர் கார்கேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: