அருப்புக்கோட்டை கல்லூரியில் தீ விபத்து, மீட்பு பணி விழிப்புணர்வு

 

அருப்புக்கோட்டை, ஜூலை 21: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் சமூக நற்பணி மன்றத்தின் சார்பாக தீ விபத்து மற்றும் மீட்பு பணிகள் என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) உமாராணி ஆலோசனையின்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி காவியா வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சமூக நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அருப்புக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் சார்பு ஆய்வாளர் ஷேக் உதுமான் கலந்து கொண்டு பேசுகையில், ‘இன்றைய மாணவர் சமுதாயம் அவர்களால் முடிந்த சேவைகளையும், உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருவது மிகவும் பெருமை அளிக்கிறது’ என்றார்.

தொடர்ந்து அவர் தீ விபத்து மற்றும் மீட்பு விழிப்புணர்வு செய்முறைகள், சமையல் எரிவாயு பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு கையாழுவது, கிணற்றில் விலங்குகள் விழுந்தால் எவ்வாறு அவற்றை காப்பாற்றுவது, பாம்புகள் மற்றும் விஷபூச்சிகளிடமிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது போன்ற தெளிவான செய்முறை விளக்கங்களுடன் மாணவ- மாணவியர்களுக்கு விளக்கி கூறினார். வணகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் சஞ்சய்ராம் நன்றி கூறினார்.

The post அருப்புக்கோட்டை கல்லூரியில் தீ விபத்து, மீட்பு பணி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: