தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக.12 கடைசி நாள்

 

தேனி, ஜூலை 21: தேனி மாவட்டத்தில் தமிழ்ஆர்வலர்கள் தமிழ்செம்மல் விருது பெற வருகிற ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடுத்துள்ளதாவது, தமிழ்நாட்டில் தமிழ்தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்செம்மல் விருதுகள் தமிழ்வளர்ச்சித் துறையால் கடந்த 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் தமிழ்செம்மல் விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்ஆர்வலர்களிடம் இருந்து 2024ம் ஆண்டிற்கான தமிழ்செம்மல் விருதுக்கு விண்ண்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ்வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்ப படிவத்தை உரியவாறு நிறைவு செய்து தன்விபரக்குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விபரங்கள், தமிழ்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள், வட்டாட்சியரால் வழங்கப்படும் குடியிருப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தேனி மாவட்ட தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வருகிற ஆகஸ்டு 12ம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க ஆக.12 கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: